Wednesday, 1 July 2020

தேன் & எலுமிச்சையில் உள்ள மருத்துவ குணங்கள்

♦ தேன் & எலுமிச்சையில் உள்ள மருத்துவ குணங்கள்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் #எலுமிச்சை.... ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.

மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக்கூட எளிதில் தீர்த்துவிட முடியும். பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்னவென்றால் உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான்.

ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பல விசயத்தை இங்கே பார்ப்போம்

♦சரியான குடலியக்கத்திற்கு...

தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக் களும் வெளியேறிவிடும்.

♦தொண்டை புண்ணை சரிசெய்ய...

எலுமிச்சையில் ஆன்டி பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை ஜுஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.

♦இளமையை தக்க வைக்க...

எலுமிச்சையில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

♦உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க...

எலுமிச்சையில் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியமும் உள்ளது. எனவே உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அப்போது உண்ணும் உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், ரத்த அழுத்தத்தைக் குறைக் கலாம்.

♦கொழுப்பை குறைக்க...

எலுமிச்சை ஒரு சிட்ரஸ் பழம். அத்தகைய பழத்தின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களானது கரைக்கப்படும். எனவே உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

எங்களிடம் சுத்தமான தேன்  & தேனீ பெட்டி கிடைக்கும்.

வெளியூர் வாசிகளுக்கு கூரியர் அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புக்கு : 

இயற்கை தேன் பண்ணை,

M.Osama,
Coimbatore,
Chennai,
Paramakudi,
Madurai.

Cell : 9043759529 ; 9944506122

No comments:

Post a Comment

முக்கிய குறிப்பு: இந்த இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வாசகர்களின் கருத்துக்களுக்கு எங்கள் தளமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு richmanmustha@gmail என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.